என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவர் மரணம்"
சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை போடி ரோட்டை சேர்ந்தவர் சோலைத்தேவர். இவரது மனைவி முத்துமாயக்காள் (வயது80). கடந்த மாதம் சோலைத்தேவர் இறந்து விட்டார்.
இதனால் முத்து மாயக்காள் மனவேதனையில் இருந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று விஷம் குடித்து விட்டார். உடனே அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது74). இவர் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய 5 மகன், மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவியான சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். எங்கும் சென்றாலும் ஜோடியாகவே செல்வர்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென அவர் இறந்தார். இந்நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்த அங்கேயே மயங்கி விழுந்தார். இதைகண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப் பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மேலூர் அருகேயுள்ள வாச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ரேகா (வயது 26). இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ராஜேஷ் குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6-ந் தேதி இறந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த ரேகா கடந்த சில நாட்களாக யாருடனும் பேசவில்லை.
மிகவும் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீக்குளித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் ரேகா மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் ரேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரேகாவின் தாயார் வெள்ளையம்மாள் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி, நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் பிரபு (வயது 35). இவர் தனியார் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (35). இவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் கனிஷ் என்ற மகன் உள்ளார். கனிஷ், கரூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறான்.
நேற்று மாலை பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவில் அருகே உள்ள ஒரு முட்புதரில் பிரபு கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிரபு மர்ம மரணம் தொடர்பாக உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-
பிரபு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அண்ணன் மோகன், அக்காள் யசோதா ஆகியோர் உள்ளனர். இதில் மோகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அக்காள் யசோதாவுக்கு திருமணமாகி கணவர் மனோகரனுடன் கரூர் அருகே உள்ள புகழுர் தமிழ்நாடு அரசு காகித ஆலை குடியிருப்பில் வசித்து வருகிறார். மனோகரன் புகழுர் காகித ஆலையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பிரபுவுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகாவுக்கும் திருமணம் நடந்தது. அதன்பின்னர் கிருத்திகாவுக்கு வெங்கமேடு போலீஸ் நிலையத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இதனால் பணிக்கு செல்ல ஏதுவாக அவர், கரூர் அருகே உள்ள ஏமூர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அவர் தூத்துக்குடிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று காலையில் வீட்டில் இருந்த பிரபு காகித ஆலையில் உள்ள தனது அக்காள் யசோதா வீட்டிற்கு சென்று, அங்கு சிறிது நேரம் அமர்ந்து பேசினார். அப்போது அவர் சோகத்துடன் பேசியதாக தெரிகிறது. பின்னர் சொந்த ஊருக்கு போகிறேன் என கூறிவிட்டு நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார்.
தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நேராக பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவிலுக்கு சென்ற அவர், அங்கு நின்று கிருத்திகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பில் பேசினார்.
அப்போது, வீட்டில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன். நான் விஷம் குடித்து விட்டேன். சாக போகிறேன் என கூறினார். உடனே, கிருத்திகா நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?, ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டார். அதற்கு பிரபு பதில் எதுவும் சொல்லவில்லை. செல்போன் வீடியோ அழைப்பையும் துண்டித்து விட்டார். அதன் பிறகு தான் பிரபு கழுத்து பகுதி துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
விஷம் குடித்து விட்டேன் என்று கூறிய அவர், கழுத்து இறுக்கி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
பிரபு பிணமாக கிடந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். அங்கு அடர்ந்த புட்புதர்கள் நிறைந்து உள்ளன. ஆகவே, பிரபுவை ஆள்நடமாட்டம் இல்லாத இந்த பகுதிக்கு யாரேனும் அழைத்துச் சென்று துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபு, கைவிரலில் அணிந்திருந்த மோதிரமும், கழுத்தில் தங்கச் சங்கிலியும் அப்படியே இருந்தது. மேலும் சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் நகை, பணத்துக்காக அவரை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ? காரணங்கள் இருக்கின்றன. இவற்றை போலீசார், துரிதமாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படஉள்ளது. #tamilnews
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள பழைய செம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ஜீவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
கடந்த 25-ந் தேதி ஸ்டீபன்ராஜ் மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய ஜீவா இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
ஸ்டீபன்ராஜ் கொலை வழக்கை போலீசார் மறைப்பதாக ஜீவா குற்றம்சாட்டினார். இதனால் அவரது கல்லறை முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதற்கு முன்பாக எனது கணவர் கொலை குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் என் உடலை ஸ்டீபன்ராஜ் சமாதி அருகே புதைத்து விடவும் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
மயங்கிய நிலையில் கிடந்த ஜீவாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் முத்து நகரை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள நகர வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்ததால் விஜயலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்